யாழ்ப்பாணம் – கல்லுண்டாயில் இன்று (6) வீசிய சுழல் காற்றினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த

முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் ஜே/136 நவாலி

தெற்கு கிராம சேவகர் பிரிவிலேயே சுழல் காற்று வீசியுள்ளது. இதன்போது 9 வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் தற்காலிகமாக தறப்பாள் வழங்கி வைக்கப்பட்டது.