தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ

அறிக்கையிடப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டார்.

உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.உடுப்பிட்டி

சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது-17) என்ற சிறுவனே கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.


ஒரே பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இந்த

இடர் இடம்பெற்றது.சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.