இந்த நிலையில் புதையல் தோண்ட முயற்சித்ததாக தெரிவித்து நேற்று இரவு இராணுவ புலனாய்வு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டு தர்மபுரம்

காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடமிருந்து சந்தேகத்திற்கிடமான தொழில்நுட்ப உபகரணங்களும் மீட்கப்பட்டு

காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

கைதான சந்தேக நபர்களில் வவுனியா பகுதியை சேர்நதவர் எனவும், மற்றவர் அம்பாறை பொத்துவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர்

குறிப்பிடுகின்றனர். இதேவேளை மற்றுமொரு சந்தேக நபர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் முன்னெடுத்த வருகின்றனர்.