
இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்தார்.
சுமார் 25 ஆயிரம் மின்சார ஊழியர்கள் கொழும்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நூற்றுக்கு 25 சதவீத சம்பள அதிகரிப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடுவதை
ஏற்கமுடியாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
