பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வல்லைச் சந்தியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.பருத்தித்துறை

வியாபாரிமூலையைச் சேர்ந்த 40 வயதுடையவரும் 38 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர் எனவும்,சந்தேக நபர்களிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என அச்சுவேலி
பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.