கொரோனாப் பெருந் தொற்றால் அல்லல்படும் இந்திய மற்றும் இலங்கை மக்களின் நலனுக்காக இன்று வெள்ளிக்கிழமை(30) பிற்பகல்-05. 15 மணியளவில் வரலாற்றுச்

சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் அமைந்துள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன வளாக சிவன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

மேற்படி விசேட பூசை வழிபாட்டிலும், ஊடகவியலாளர் சந்திப்பிலும் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக பரமாச்சாரிய சுவாமிகள்,

சிவபூமஅறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன்,

கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தின் முதல்வரும், அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்தவருமான ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.