மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படக்கூடிய மிக உன்னதமானதொரு விடயம். அதே போல், குறித்த காலப்பகுதியில் தான், உடல் மற்றும் உள ரீதியான பல்வேறு புதிய நிலைமைகளுக்கு பெண் ஒருவர்

முகங்கொடுக்க வேண்டி நேரிடும். பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே விதமாக அமையாது.அந்த வகையில் தாய் மற்றும் சேயின் உடல்நிலை தொடர்பில் சில அறிகுறிகளை எம் உடல் உணர்த்த எத்தனிக்கும். அது போன்ற சில முக்கிய அறிகுறிகளை நாம் இப்போது பார்ப்போம்.

வயிற்றின் நடுப்பகுதி மற்றும் மேற்பகுதிகளில் வலி:பிரசவ காலத்தில் இது போன்ற வலிகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டலுடன் வலி ஏற்படுவதுண்டு. நெஞ்செரிவு, அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் உட்கொண்ட உணவு நச்சுத்தன்மையடைதல் என்பவற்றால் இந்த நிலைமை ஏற்படலாம். சிலவேளைகளில் கர்பிணித் தாய்மார்கள் உயர் இரத்த அழுத்தத்தால்
பாதிக்கப்படுவதையும் இது குறிக்கும். இது தொடர்பில் வைத்தியரை அணுகுதல் அவசியம்.

அடிவயிற்றில் வலி:பிரசவ காலத்தின் போது அடிவயிற்றில் வலி ஏற்படுமாயின் நாம் அதை புறக்கணிக்க கூடாது. சில சமயங்களில் தசைநார்கள் கிழிவதால் இந்த வலி ஏற்படலாம். எனினும் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தாது. ஆனால் குறித்த வலி, ஃபலோப்பியன் குழாய் அல்லது கருப்பைக்கு வெளியே குழந்தை வளர்தல், குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் ஃபைபுரொய்ட் கட்டிகள் உடைதல் போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.

காய்ச்சல்:கர்ப்பகாலத்தின் போது தடுமல் இன்றி 100 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியம். ஏனெனில் 200 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் ஏற்படுமாயின் அது குழந்தையையும் பாதிக்கலாம்.

கண்பார்வையில் குறைபாடு:பார்வை மங்குதல் மற்றும் கண் பார்வையில் குறைபாடு போன்ற நிலைமைகள் தோன்றின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படலாம்.

கை, மூட்டு மற்றும் முகத்தில் வீக்கம்:கர்ப்பகாலத்தில் கை, மூட்டு, மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படுவது சாதாரண விடயம் தான். இருப்பினும், அடிவயிற்றில் வலி மற்றும் கண்பார்வை குறைதல் போன்ற அறிகுறிகளுடன் வீக்கமும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.

தலை வலி:தாய்மார்களுக்கு தலை வலி ஏற்படுவதும் சாதாரண விடயமே. ஆனால் தாங்க முடியாத தலை வலி ஏற்படுமாயின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில் தாய் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாவதை குறித்த அறிகுறிகள் குறிக்கும்.
அதிகளவான தாகம் ஏற்படுதல்:சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் ஏற்படுதல்

போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படின் அதனை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் மற்றும் அதிக தாகம் போன்றவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடியன. இந்த நிலைமை நீரிழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் குறித்த நிலைமைகளை வைத்தியரிடம் எடுத்துக்கூறி ஆலோசனை பெற வேண்டும்.
Homeஇப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்தாம்! கர்ப்பிணிகளே உஷாரா இருங்க..!

இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்தாம்! கர்ப்பிணிகளே உஷாரா இருங்க..!
ஆரோக்கியம்

September 5, 2021Leave A CommentOn இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்தாம்! கர்ப்பிணிகளே உஷாரா இருங்க..!

மகப்பேறு என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படக்கூடிய மிக உன்னதமானதொரு விடயம். அதே போல், குறித்த காலப்பகுதியில் தான், உடல் மற்றும் உள ரீதியான பல்வேறு புதிய நிலைமைகளுக்கு பெண் ஒருவர்

முகங்கொடுக்க வேண்டி நேரிடும். பிரசவம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரே விதமாக அமையாது.அந்த வகையில் தாய் மற்றும் சேயின் உடல்நிலை தொடர்பில் சில அறிகுறிகளை எம் உடல் உணர்த்த எத்தனிக்கும். அது போன்ற சில முக்கிய அறிகுறிகளை நாம் இப்போது பார்ப்போம்.

வயிற்றின் நடுப்பகுதி மற்றும் மேற்பகுதிகளில் வலி:பிரசவ காலத்தில் இது போன்ற வலிகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டலுடன் வலி ஏற்படுவதுண்டு. நெஞ்செரிவு, அமிலத்தன்மை, அஜீரணம் மற்றும் உட்கொண்ட உணவு நச்சுத்தன்மையடைதல் என்பவற்றால் இந்த நிலைமை ஏற்படலாம். சிலவேளைகளில் கர்பிணித் தாய்மார்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதையும் இது குறிக்கும். இது தொடர்பில் வைத்தியரை அணுகுதல் அவசியம்.

அடிவயிற்றில் வலி:பிரசவ காலத்தின் போது அடிவயிற்றில் வலி ஏற்படுமாயின் நாம் அதை புறக்கணிக்க கூடாது. சில சமயங்களில் தசைநார்கள் கிழிவதால் இந்த வலி ஏற்படலாம். எனினும் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தாது. ஆனால் குறித்த வலி, ஃபலோப்பியன் குழாய் அல்லது கருப்பைக்கு வெளியே குழந்தை வளர்தல், குறைமாத பிரசவம், கருச்சிதைவு மற்றும் ஃபைபுரொய்ட் கட்டிகள் உடைதல் போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.

காய்ச்சல்:கர்ப்பகாலத்தின் போது தடுமல் இன்றி 100 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியம். ஏனெனில் 200 டிகிரி செல்சியஸிற்கும் மேலாக காய்ச்சல் ஏற்படுமாயின் அது குழந்தையையும் பாதிக்கலாம்
.
கண்பார்வையில் குறைபாடு:பார்வை மங்குதல் மற்றும் கண் பார்வையில் குறைபாடு போன்ற நிலைமைகள் தோன்றின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படலாம்.

கை, மூட்டு மற்றும் முகத்தில் வீக்கம்:கர்ப்பகாலத்தில் கை, மூட்டு, மற்றும் முகத்தில் வீக்கம் ஏற்படுவது சாதாரண விடயம் தான். இருப்பினும், அடிவயிற்றில் வலி மற்றும் கண்பார்வை குறைதல் போன்ற அறிகுறிகளுடன் வீக்கமும் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.

தலை வலி:தாய்மார்களுக்கு தலை வலி ஏற்படுவதும் சாதாரண விடயமே. ஆனால் தாங்க முடியாத தலை வலி ஏற்படுமாயின் வைத்தியரை நாட வேண்டும். ஏனெனில் தாய் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்திற்கு உள்ளாவதை குறித்த அறிகுறிகள் குறிக்கும்.
அதிகளவான தாகம் ஏற்படுதல்:சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம்

ஏற்படுதல்போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படின் அதனை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல் மற்றும் அதிக தாகம் போன்றவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக் கூடியன. இந்த நிலைமை நீரிழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் குறித்த நிலைமைகளை வைத்தியரிடம் எடுத்துக்கூறி ஆலோசனை பெற வேண்டும்.

சிறுநீர் கழிக்கும் போது எரிவு ஏற்படல்:சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிவு யூ.ரி.ஐ தொற்று காரணமாக ஏற்படக் கூடும். இதற்கு வைத்தியரை நாடுவதன் மூலம் தீர்வு காணலாம்.

வாந்தி:கர்ப்பகாலத்தில் வாந்தி ஏற்படுதல் என்பது மிகச் சாதாரண விடயம். இருப்பினும் நாளொன்றுக்கு இரண்டு முறை வாந்தி ஏற்படுமாயின் தாயின் உடலில் உள்ள சக்தி படிப்படியாக குறைவடையக் கூடும். இதனால் நீரிழப்பு ஏற்படவும் கூடும்