ஏழு மாத கைக்குழந்தையை கிணற்றினுள் வீசி படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் குழந்தையின் தாயை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஹைறாத் நகரில் நடைபெற்றுள்ளது.

காத்தாதன்குடி ஹைறாத் வீதியிலுள்ள வீடொன்றில் கிணற்றிலிருந்தே கைக்குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள தாயே குழந்தையை கிணற்றில்வீசி படுகொலை செய்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனனர். குறித்த தாய்க்கு மேலும் 4வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளதும் குறிப்படத்தக்கது.