மகாராஷ்டிரா மாநிலம், கர்ஜத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமன் மருத்துவமனையில் சரிதா என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன.
பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் சரிகாவுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தது அவரது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மருத்துவமனையில் வென்டிலேடர் வசதி இல்லை.

குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்திருந்ததால், குழந்தைகளை வென்டிலேட்டரில் வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், சரிதா தாலியை விற்று அந்த பணத்தில் குழந்தைகளை பாராமதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மற்ற மூன்று குழந்தைகளும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன.

இதில் 2 குழந்தைகள் ஒரு நாள் சிகிச்சைக்கு பிறகு இறந்து விட்டன. கடைசியில் ஒரு குழந்தை மட்டுமே எஞ்சி இருந்தது. அந்த குழந்தையையும் உடனே வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சரிகாவின் உறவினர்கள் வலியுறுத்தியதால், வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஆனால் வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த குழந்தையும் இறந்தது. ஏழையாக இருந்ததால், 5 குழந்தைகளில் ஒன்றை கூட அவர்களால் காப்பாற்ற முடியவில்லை என்பது மிகப் பெரிய துரதிருஷ்டம்.