யாழ்.மாவட்டத்தில் வருடந்தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள் மற்றும் 300 பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளான சிறுமிகளின் எண்ணிக்கை போன்றவை சுகாதார பணிமனையில் வருடந்தோறும் பதிவாகும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகின்றன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
துளிர்கள் நிறுவனத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் „றிங்… றிங்‘ என்னும் சமூக சீர்திருத்த குறுந்திரைப்பட விழாவும் சேர் பொன்.இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நிறுவனப் பணிப்பாளர் கே.எஸ்.ரகு தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச அதிபர் மேலும் பேசுகையில்:
தற்போதைய கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையில் யாழ்.மாவட்டத் தில் 27 ஆயிரம் விதவைகள் உள்ளனர். இதில் யுத்தம் காரணமாக கணவனை இழந்தவர்களும் இயற்கை மரணத்தில் கணவனை இழந்தவர்களும் உள்ளடங்கு கின்றனர். இவர்கள் குடும்பத் தலை மைத்துவப் பொறுப்பு வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர்.மேலும், பெண்கள், சிறுவர்கள் என்ற அடிப்படையில் மதிப்பீடு செய் தால் உடல், உள ரீதியாகவும் பாதிக் கப்பட்டவர்கள் இவர்களேயாவர். நாள் ஒன்றுக்கு உள ரீதியாகப் பாதிக்கப் பட்டவர்கள் 5 பேர் எனப் பதிவாகி உள்ளனர். அங்கவீனம் என்பதும் ஒரு வகையில் உளரீதியான பாதிப்புத்தான்.
அத்துடன், ஒருமாதத்தில் 60 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுகின்றனர். இவை யாவற்றுக்கும் காரணம் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைதான்.அண்மைக் காலமாக கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், இவற்றில் பெற்றோர்களின் பங்கும் உள்ளடங்குகிறது. தமது பிள்ளைகள் எங்கு செல்கின்றனர், யாருடன் உரையாடுகின்றனர் என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர்க ளுடையது. சில பெற்றோர்கள் அந்தப் பொறுப்பைப் பெற்றுக் கொள்ளத் தவறி விடுகின்றனர்.கல்வி அறிவுள்ள பெற்றோர்கள் மத்தியில் இவ்வாறான பிரச்சினைகள் தலை நிமிர்ந்து நிற்கின்றன. சமுதாயத்தின் மத்தியில் இவை ஆராயப்பட வேண்டும். இவையாவற் றுக்கும் தீர்வுகள் பெற்றோர் மத்தியில் உண்டு.
அதுமட்டுமல்ல முன்னாள் போராளிகள் என இனங்காணப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் சமுதாயத்துடன் இணைத்துக் கொள்ளப்படல் வேண்டும். இவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள், பாதுகாப்பான வாழ்விடங்கள் ஆகியவற்றை இந்தச் சமுதாயம் தான் வழங்க வேண்டும்.வலுவிழந்தோர்கள், உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை சமூ கம் மதிக்க வேண்டும். சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.ஒருபுறம் ஆக்கபூர்வமான செயற்றிட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றவாறு உள்ளன.
கொலைகள், கொள்ளைகள் என்பவற் றுக்கு வறுமை ஒரு காரணமாக அமைந்துள்ளது. இவர்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.வாழ்க்கை என்றால் என்ன? அவற்றின் பின் விளைவுகள் பற்றியும் வெளிப்படையாகப் பெற்றோர் பிள்ளைகளுடன் கலந்துரையாட வேண்டும். என்றார் அவர்.
You are here : Siruppiddy.Net » featured » யாழ். ஆண்டு தோறும் 500 இளவயதுக் கர்ப்பங்கள்
தேடல் பெட்டி
ஆலய வரலாறு
ஆறுமுக நாவலர் வரலாறு
நிலாவரைக்கிணறு
குடிமகன் குறை ஒலி வடிவம்
தரவரிசை
featured அறிவித்தல் அறிவியல் ஆன்மீகம் ஆலய நிகழ்வுகள் இசையும் கதையும் இணையப்பார்வை இலங்கை உடல் நலம் உணவு உலகம் ஊர் இணையம் ஊர்ச்செய்திகள் ஏனைய செய்தி கவிதை கவிதை வலம் சினிமா சிறுப்பிட்டி ஒன்றியம் சிறுப்பிட்டி செய்தி சிறுப்பிட்டி பூமகள் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் சிறுப்பிட்டி வடக்கு சுவிஸ் தமிழர் நினைவஞ்சலிகள் நீர் வளம் காப்போம் புகைப்படங்கள் புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா பொது அறிவு மரண அறிவித்தல் யாழ் செய்தி ராசிபலன் வாழ்த்துக்கள் விளையாட்டு வெளியீடுகள் ஸ்ரீஞானவைரவர் ஸ்ரீ ஞானவைரவர்Meta
Kategorien
இறப்புத்தகவல்
தொடர்புகளுக்கு
infosiruppiddy@gmail.comமாதப் பதிவுகள்
இணைப்புக்கொடுக்க
facebook
பதிவு வகைகள்
-
Categories
- featured (2.316)
- அறிவித்தல் (264)
- அறிவியல் (19)
- ஆன்மீகம் (217)
- ஆலய நிகழ்வுகள் (41)
- இசையும் கதையும் (9)
- இணையப்பார்வை (13)
- இலங்கை (1.366)
- உடல் நலம் (381)
- உணவு (80)
- உலகம் (1.255)
- ஊர் இணையம் (11)
- ஊர்ச்செய்திகள் (1.123)
- ஏனைய செய்தி (12)
- கவிதை (8)
- கவிதை வலம் (43)
- சினிமா (51)
- சிறுப்பிட்டி ஒன்றியம் (17)
- சிறுப்பிட்டி செய்தி (196)
- சிறுப்பிட்டி பூமகள் (12)
- சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் (34)
- சிறுப்பிட்டி வடக்கு (106)
- சுவிஸ் தமிழர் (64)
- நினைவஞ்சலிகள் (27)
- நீர் வளம் காப்போம் (65)
- புத்துார் ஸ்ரீ சோமஸ் கந்தா (3)
- பொது அறிவு (383)
- மரண அறிவித்தல் (186)
- யாழ் செய்தி (42)
- ராசிபலன் (61)
- வாழ்த்துக்கள் (565)
- விளையாட்டு (9)
- வெளியீடுகள் (3)
- ஸ்ரீ ஞானவைரவர் (47)
- ஸ்ரீஞானவைரவர் (74)
-
Pages
-
Archives
- Januar 2021 (25)
- Dezember 2020 (39)
- November 2020 (39)
- Oktober 2020 (40)
- September 2020 (37)
- August 2020 (35)
- Juli 2020 (36)
- Juni 2020 (25)
- Mai 2020 (12)
- Juni 2019 (7)
- Mai 2019 (21)
- April 2019 (60)
-
Blogroll
- Documentation
- Plugins
- Siruppiddy.net Facebook - Siruppiddy.net Facebook
- Suggest Ideas
- Support Forum
- Themes
- WordPress Blog
- WordPress Planet
- WordPress Templates
-
Meta