ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.
மதனப்பள்ளியில் உள்ள பாலாஜி நகர், சிவாஜி நகர், அனப்பகுட்டா, சந்திரா காலனி, கூட்டகோலு, கொத்தவாரிப்பள்ளி மற்றும் நிம்மனப்பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் அதிர்வுகளை உணர்ந்தனர்.

வீட்டில் இருந்த பொருட்கள் மளமளவென சரிந்ததால், மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இதற்கிடையே ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் போல ஏற்பட போகிறது என்ற வதந்தி பரவியதால், விடிய விடிய தெருக்களிலேயே தவித்தனர். சித்தூர் ஆர்டிஓ சுப்பிரமணியேஸ்வர ரெட்டி இதுபற்றி கூறுகையில், ‘சித்தூர் மாவட்டத்தில் நேற்றிரவு சுமார் 3 முதல் 5 நொடிகள் வரை பூமி அதிர்ச்சி ஏற்பட்டது.

பல இடங்களில் சிறிது நேர இடைவெளியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.8 பதிவாகியுள்ளது’ என்றார்.