நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர் நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது.
சுற்றுலா மையமாகும் நிலாவரை ஒரு பார்வை
நிலாவரை என்னும் பெயர் எவ்வாறு உருவாகியது எனில் இக் கிணற்றின் ஆழம் யாருக்கும் தெரியாததால் இதன் ஆழம் வானத்தில் உள்ள „நிலா“ வரைக்கும் என சொல்லப்பட்டதால் இதன் பெயர் நிலாவரை என உருவாகியதாக எனது தாத்தா சொல்லி அறிந்துள்ளேன், மேலும் இக்கிணறு நவர்கிரியில் உள்ளது. புத்தூர் நிலவரை என்று உங்கள் குறிப்பில் எழுதி உள்ளீர்கள்
பிழைகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி பாபு