நீல வானம், பச்சைக் கிளி, எலுமிச்சை மஞ்சள் என்று நாம் பொருள்களை அதனதன் நிறத்தோடுதான் நினைவில் வைத்திருக்கிறோம். இவற்றை மாற்றினால் குழப்பம் ஏற்படும். பறந்து வரும் கால்பந்தைப் பார்க்கும்போது நமக்கு பந்தின் வடிவம், நிறம் மற்றும் அதன் திசை, வேகம் ஆகியவைகளும் சேர்ந்துதான் கவனிக்கிறோம்.

மூளையில் நிறத்தை அறிவதற்குத் தனியாக ஒரு இடமும் அதன் வடிவம் முதலானவற்றை அறிவதற்குத் தனித்தனியாக வேறு இடங்களும் உள்ளன. இருப்பினும் நாம் அவற்றைத் தனித்தனியாக உணராமல் ஒன்றாகத்தான் அறிகிறோம். மூளையின் பகுதிகளை ஒருகிணைத்து வழங்கும் பகுதி ஒன்று இருப்பதால் இது சாத்தியமாகிறது.

ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரித்தான நிறம் வடிவம் முதலியன வெவ்வேறு இடங்களில் நினைவுகளாக சேமிக்கப்படுகின்றன. மீண்டும் நினைவு கூரும்போது அவற்றை ஒன்று திரட்டித்தான் நாம் பார்க்கிறோம். சிக்காகோ பல்கலைக்கழக நரம்பியல் வல்லுநர்கள் ஒரு காரியம் செய்தார்கள்.

ஒரு கண் மேல் கீழாக உள்ள சிவப்பு கோடுகளைப் பார்க்கவும், இன்னொரு கண் வழியாக பச்சை நிற குறுக்குக் கோடுகளைப் பார்க்கும்படியாகவும் செய்து ஒரு கண்ணில் கோடுகளை கவனிக்காதபடி செய்தபோது பார்ப்பவருக்கு ஒரு திசை கோடுகள் தான் தெரிந்தன. ஆனால் இரண்டு நிறங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்தக் கோடுகளுக்கு கலர் கொடுத்தன. மூளை நிறங்களை பொருள்களுக்கு எப்படி தீர்மானிக்கின்றன என்பதை அறிவதற்காக இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர். வடிவமில்லாமல் வெறும் நிறத்தை மாத்திரம் சேமித்து வைக்கத் திணறுகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.

ஆண்டிற்கு ஒரு முட்டை இடும் கிளிகள் : 50 ஆண்டுகள் ஆயுட்காலம்

பறவைகளில் மேல் அலகை உபயோகிக்கும் குணம் கொண்ட கிளிகள் ஆண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடுகின்றன. மக்களின் விருப்பமான பறவைகள் வரிசையில் கிளிகளுக்கு முதலிடம் உண்டு. கிளிகளை அழகு பிராணியாகவும் ஜோதிட சுவாமியாகவும் மட்டுமே பார்க்க தெரிந்த நமக்கு, அதன் குணங்களை அறிய வாய்ப்பில்லை.

சித்தாசிடே’ குடும்பத்தைச் சார்ந்த இவற்றுக்கு வளைந்த அலகுகள் அழகுக்கு அழகு சேர்க்கிறது. கால் ஒன்றில் முன்னும், பின்னும் நான்கு விரல்கள் காணப்படும். கிளிகளுக்கு சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் என கணிக்கப்பட்டுள்ளது. உலகில் 600 வகையான கிளிகள் காணப்படுகின்றன. மேல் அலகை மட்டும் பயன்படுத்தும் குணம் கிளிகளின் பிரதானமாகும். கேட்கும் திறன் அதிகம் கொண்டவை என்பதால் இவற்றை நெருங்குவது கடினமாகும். ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் கிளிகளின் இனப் பெருக்கம் குறைந்த அளவிலேயே இருக்கிறது.

பழங்கள், கொட்டைகளை உண்டு வாழும் இவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுவது குறைவு. அவுஸ்திரேலியாவில் உள்ள ‘கியா’ வகை கிளிகள் மட்டும் இறைச்சியை உண்டு வாழும் தன்மை உடையவை. மரப்பொந்துகளை தனது இருப்பிடமாகக் கொண்டுள்ள கிளிகளுக்கு மனிதரின் பேச்சை எதிரொலிக்கும் வல்லமை உள்ளது. தமிழகத்தில் காணப்படும் கிளிகளுக்கு சிவப்பு வளைய கிளிகள் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

உலகிலேயே பெரிய கடிகாரம்

உலகிலேயே பெரிய கடிகாரம் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனில் உள்ளது. அந்நகரில் உள்ள நாடாளுமன்ற மாளிகையின் மேல் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் பிரித்தானிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் கிகிவி என்ற நிறுவனம் வானொலியையும் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது. இதில் ஒலி- ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின்போது இதை குண்டு வீசித் தகர்க்க ஜெர்மனி எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை