இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தான் இனிமேல் உலகக் கிண்ணப்போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருக்கின்றார்.இன்றைய தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அத்தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு,

எனது அணிக்கு என்னாலான சேவைகளை வழங்குவேன். அடுத்த உலகக் கிண்ண போட்டி இடம்பெறும் ஆண்டான 2015 ஆம் ஆண்டு தான் விளையாடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

தான் கடந்த பல வாரங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும் தனக்கு ஓய்வு தேவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அடுத்த உலகக் கிண்ணப்போட்டிக்கு இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களும் வந்து விளையாட வேண்டும் என கேட்டுள்ளார்.

தற்போது நடந்து முடிந்த உலகக் கிண்ணப் போட்டியில் மொத்தமாக 13 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான இறுதியாட்டத்திலும் சேவாக், சச்சின் ரெண்டுல்கர் ஆகியோரை தனது அபார பந்து வீச்சின் மூலம் இலகுவாக வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.