உலககோப்பை இறுதிபோட்டியில் சுழல்பந்து வீச்சாளர்கள் போதிய விக்கெட் எடுக்காததே இலங்கையின் தோல்விக்கு காரணம் என்று இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதிபோட்டியில் இந்திய அணி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் இலங்கை அணியினர் தாயகம் திரும்பினர். அங்கு முரளிதரன் கூறுகையில், இலங்கை அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. 274 ரன்கள் என்பது நல்ல ரன்களாகும். ஆரம்பத்தில் மலிங்கா சிறப்பாக பந்து வீசி 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆனால் அதன் பின்னர் இந்திய அணியின் விக்கெட்களை வீழ்த்தவில்லை. சுழல்பந்து வீச்சாளர்கள் போதிய விக்கெட்களை வீழ்த்தாததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கூறினார்.
மேலும் அவர் ஆரம்பத்தில் இன்னும் ஒரு சில விக்கெட்களை வீழ்த்தியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். இலங்கை அணியின் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறிய முரளிதரன் வரும் 2015ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை இலங்கை அணி வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.