யாழ்.நகர மத்தியில் ஆஸ்பத்திரி வீதியில் புதிதாக மணிக் கூட்டுச் சிகரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

வைரவர் ஆலய சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இதனை „சேபெக் ஷல்‘ சலவைப் பவுடர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இரு பக்கம் நேரத்தைக் காட்டும் மணிக்கூடுகள் இணைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 15 அடிகள் உயரம் கொண்டதாகவும் சிகர உச்சியில் சூரியக்கதிர்கள் போன்ற வடிவமைப்பும் சிகர கீழ்த்தளத்தில் தமிழ் நங்கை ஒருவர் கோலம் போடுவதான காட்சியமைப்பும் கொண்டுள்ளது.