வான்பரப்பில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன ஆர்.கியூ- 170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடனை உளவு பார்க்கும் நடவடிக்கையில் மேற்படி விமானங்களே ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட அவ்விமானம் பின்னர் ஈரானியப் படைகளால் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஈரானின் அணுச் செறிவாக்கல் நடவடிக்கைகளை உளவுபார்க்கவே அமெரிக்கா இத்தகைய உளவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கா மட்டுமன்றி இஸ்ரேலும் இத்தகைய நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.