இயற்கையின் படைப்பில் என்னதான் ஒரு விந்தை. நினைத்து

பார்க்கமுடியாத அளவு சிலவிடயங்கள் அமைந்து விடும்.

கியூபெக் நகரில் விசித்திரமான நாய் ஒன்று பிறந்துள்ளது.

அதாவது இயற்கைக்கு மாறாக நாயின் உடல் முழுவதும்

தேவையற்ற தோலினை கொண்டுள்ளது (மரத் துகள்கள் வடிவில்).

இதன் மூலம் குறித்த நாய் அகோரமாக காட்சியளித்தது.

இதனை அறிந்த கியூபெக் விலங்குகள் பாதுகாப்பு சங்கள்

குறித்த நாய்க்கு சத்திர சிச்சை மூலம் குணப்படுத்த

உத்தரவிட்டது. அதற்கமைய வைத்தியர்களின் முயற்சியின்

பயனால், தேவையற்ற கழிவுப் பொருட்கள் நீக்கப்பட்டு

நாயினை குணப்படுத்தியுள்ளனர்.

தற்போது குறித்த நாய் மிகவும் அழகுடன் ஆரோக்கியமாகவும்

இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.