அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸ மகாராம பகுதியில் ஆய்வுகளை நடத்தி வரும் ஜேர்மனிய தொல்லிய நிபுணர்கள் நேற்று பிற்பகல் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் மையத்துக்கு வருகைதந்து கலந்துரையாடல்களை நடத்தினர்.
யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் க. புஸ்பரட்ணம் விடுத்த விசேட அழைப்புக்கு அமையவே இக்குழுவினர் யாழ்.வந்துள்ளனர்.
இக்குழுவில் டாக்டர் ஹாங்ஜோர்ஜ்வெஸ்ஸர், டாக்டர் ஹய்ரும்செம் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தக் குழுவினர் கந்தரோடை, ஆனைக்கோட்டைப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட தொல்பொருள்களைப் பார்வையிட்டதோடு,  இந்த வருட இறுதியில் தாம் யாழ்ப்பாணத்தில் ஆய்வுகளை நடத்தவுள்ளோம் எனத் தெரிவித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி  பேராசிரியர் எஸ். ஞானக்குமரனும் கலந்துகொண்டிருந்தார்.