பாம்புகள் தான் பொதுவாக தவளைகளை விழுங்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு எதிர்மாறாக பாம்புகளை விழுங்கும் தவளைகள் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா?
தவளை வகைகளில் பல வகை இருக்கின்றன. அவற்றின் இயல்புகளும் வித்தியாசமானவையாக இருக்கும். அத்துடன் கண்டங்கள் தாண்டும் போது தவளைகளின் இயல்பும் பருமனும் வேறுபடும். அவ்வாறு வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் காளை மாட்டுத் தவளை தான் இந்த பாம்பு விழுங்கும் அதிசய தவளை இனமாகும்.

Bullfrog அல்லது American Bullfrog என அழைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன. மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.

அத்துடன் ஏனைய தவளைகள் போன்றே இவையும் நீரிலும், நிலத்திலும் வாழ்ந்தாலும் பாம்பை உணவாகக் கொள்வதாயின் அவற்றுக்கு நிலத்தில் வாழும் போது மட்டுமே அதற்கான ஆற்றல் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நீரில் வாழும் போது அது சாதாரண தவளையின் பலத்துடனேயே காணப்படுகின்றது.