ஸ்ரீலங்காவில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் 64 நாடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் ஏதிலிகளாக பதிவு செய்துள்ளனர்

இதில் தமிழ்நாட்டில் உள்ள 112 முகாம்களில் 32 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்

இதுதவிர வெளியிடங்களில் 32 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாகவும் ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.