எலகந்த பள்ளிகாவத்த கடற்கரைப் பகுதியில் சுமார் 25 அடி நீளமான இறந்த நிலையில் காணப்பட்ட திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இத் திமிங்கிலமானது இன்று காலை நான்கு மணியளவில் கரையொதுங்கியுள்ளதுடன், அதன் உடற்பகுதிகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனைப் பார்வையிட அதிகளவான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். எனினும் கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.