சிறு பாவை இவளின் சிரிப்பினிலே ஒரு கலக்கம் ,

தந்தை முகத்தில் ஒரு பதட்டம் ,

வெட்டி விடவே,

பெட்டி நிறைய,

வெட்டி பேச்சுகளுடன்,

பாச நாடகம் ஒன்று அரங்கேறிக்கொண்டிருந்தது.

வந்திருந்த வெட்டிக்காரர்கள்

கெட்டித்தனம் சொல்ல,

பாவி மனக்காரர்களின் பாதகத்தின் மத்தியில்,

இலட்சங்களும் ,தங்கங்களும் ,ஒத்துவர

நடக்குது ஒரு திருமணம் .

கட்டி வைத்த பின் மட்டும் விட்டு விடாத துன்பம்

அந்த,

கெட்டுவிடாத வரதட்சனை

பட்டு விடாதா பாடனைத்தும்

பட வைத்துவிடும் கொடுமை .

…….கலை