ஆதி மனிதன் தொட்டு

அண்மைக்காலம்வரை

அன்பெனும் பிணைப்பால்

பின்னிப்பிணைந்து

வாழ்ந்;த நம் உறவுகள்

ஏன்தான் இன்று இப்படி? ஓலை வீட்டிலும்

ஒட்டிய வயிற்றுடனும் வாழ்தபோது

ஒற்றுமையாய் வாழ்ந்த நம் உறவுகள்

காசைப்பார்த்ததும் மாறியதோ?

கடல் தாண்டி வந்தபின் மாறியதோ?

கருணை மனம் எங்கு ஓடியதோ?

தன்வயிற்றை ஒட்டவைத்து

தன்னுள்  கருவாக்கி

உன்னை ஊர் போற்ற உருவாக்கிய

அன்னைக்கு உதவாமல்?

உலகத்தில் நீ எங்கு வாழ்ந்;தாலும்

உன்னால் யாருக்கென்ன நன்மை?

கண்ணை மறைத்ததோ

காசு வந்து உன்னை?

பின்னால் ஒருகாலம்

உன்னிலை உணரும்போது

மண்ணில் இருக்காளே அன்னை?

அப்போது நீ எண்ணித் தவித்தென்ன நன்மை?

ஆக்கம் இசைக்கவிஞர் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா.