பருத்தித்துறை, தும்பளை மேற்குப் பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் உத்திரவிட்டுள்ளார்.
பருத்தித்துறையில் இயங்கும் வெளிநாட்டு உதவி நிறுவனத்தில் வைத்தியராகப் பணிபுரியும் பெண் கடலில் குளித்துக்கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மூவர் குறிப்பிட்ட பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயன்றனர். ஊர் மக்கள் மூவரையும் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்றுமுன்தினம் குறிப்பிட்ட மூன்று மாணவர்களையும் பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆயர் செய்தனர்.வழக்கை விசாரித்த நீதிவான் மூவரையும் பதினான்கு நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்திரவிட்டார். வடமராட்சியில் பிரபல கல்லூரி ஒன்றின் மாணவர்களே மறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.