ஜப்பானின் கடந்த மாதம் இதே நாளில் புகுசிமா நகரில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியதில் பல்லாயிரம் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்நகருக்கு தென் கிழக்கே 90 கி.மீ தொலைவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேதம் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.