ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சித்தார்த்தா கல்லூரி வளாகத்தில், 25 சமையல் நிபுணர்கள் இணைந்து 38.2 அடி நீள தோசை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
இதுவே உலகின் நீளமான தோசை ஆகும். இதற்கு முன்பு, உலக சாதனையாக இருந்த 32.5 அடி நீள தோசை தயாரிப்பை அவர்கள் முறியடித்தனர்.

மத்திய மந்திரிகள் சுபோத்காந்த் சகாய், புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. இதற்காக பிரமாண்ட தோசைக்கல்லும், ஸ்டவ்வும் பயன்படுத்தப்பட்டது. லண்டனில் இருந்து வந்திருந்த கின்னஸ் சாதனை புத்தக பிரதிநிதி எலிசபெத் ஸ்மித், இச்சாதனையை நேரில் பார்த்தார்.

அந்த தோசை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதாக, பலத்த கரகோஷத்துக்கிடையே அவர் அறிவித்தார். அதற்கான சான்றிதழையும் அவர் வழங்கினார்.