மனித எண்ணங்களினால் கட்டுப்படுத்தக்கூடிய கணனியை கண்டுபிடித்துள்ளதாக வொஷிங்டன் பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

இக்கணனியானது உடலினை அசைக்கமுடியாத மற்றும் பேச முடியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

இது மூளையில் ஏற்பட்ட காயம் அல்லது பக்கவாதத்தினால் பேச்சை இழந்தவர்களுக்கும் பயன்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வொஷிங்டன் மருத்துவ கல்லூரி டாக்டர் எரிக் லுத்தார்ட், மருத்துவ வராலாற்றில் இது ஒரு மைல் கல்லெனவும் மனிதர்கள் மனதில் நினைப்பதினை எதிர்வு கூறக்கூடியதாக உள்ளமை மிகப்பெரிய வெற்றியெனவும் தெரிவிக்கின்றார்.

இச் செயற்பாடானது இலக்ட்ரோகோர்டியோகிரபி முறையிலேயே நடைபெறுகின்றது.