சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில், உலக பல்கலைக்கழக இளைஞர் மாநாடு இவ்வருடம் ஜூலை 6 முதல் 8 ஆம் திகதிவரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.’தமிழ் இளையோர் அடையாளத்தை கற்பனைசெய்தல்‘ எனும் தொனிப்பொருளில் உலகெங்குமுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இளையோர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான களத்தை இம்மாநாடு வழங்கும்.

இம்மாநாடானது, உலககெங்குமுள்ள தமிழ் சந்தியைச் சேர்ந்த இளையோர்கள், 21 ஆம் நூற்றாண்டில் தமது இனத்துவ அடையாளத்தை பேணும் விதம் குறித்து கருத்துப்பரிமாற்றங்கள், விவாதங்களை நடத்துவதற்கான ஒரு முயற்சி என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் 33 ஆவது நிறைவேற்றுக்குழு தெரிவித்துள்ளது.

தமது கட்டுரையின் சுருக்கத்தை சிங்கப்பூர் நேரப்படி 2012 மார்ச் 5 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு உலககெங்குமுள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இளையோர்களை அப்பேரவை கோரியுள்ளது. இப்பேரவை 1975 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது