யாழ்.புத்தூரில் டைனமைற்றை கையாண்ட இளைஞர்கள் இருவர் அது வெடித்ததில் படுகாயமடைந்துள்ள நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சுண்ணாம்பு கற்பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டைனமைற்றை சகோதரர்கள் இருவர் எடுத்து கற்பாறைகளுக்கிடையில் புகுத்தியுள்ளனர். இதனால் அது நிலத்துடன் உராய்ந்து வெடித்துள்ளது.

காலை 10மணிக்கு இடம்பெற்ற இச்சம்பவத்தில், ப.சசிக்குமார் (வயது30), ப.சிவகுமார் (வயது 21) ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக புத்தூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.