சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கை இளைஞன் ஒருவர் 10.1 மில்லியன் ரூபாய் பெறுமதிக்கும் அதிகமான தங்க நகைகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

இவருக்கு வயது 21. தெமட்டகொடவைச் சேர்ந்தவர்.

இவரிடம் இருந்து சுங்க அதிகாரிகளால் 1.74 கிலோ எடை உடைய தங்கங்கள் மீட்கப்பட்டன.

இவற்றுள் 216 சங்கிலிகள், 20 நெக்ளசுகள், 06 ஜோடி தோடுகள், 13 தங்க பிஸ்கெட்டுகள் அடங்குகின்றன.

சுங்க அதிகாரிகள் இவற்றை பறிமுதல் செய்தமையுடன் இளைஞனுக்கு 07 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உள்ளனர்.

கருத்திடுக

comments

Powered by New Facebook Comments