யேர்மனியில் உள்ள கஸ்ரொப்-றவுக்சல் தமிழாலயத்தின் 10வது அகவை நிறைவுவிழா 11.03.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று குறித்த நேரத்தில் ஆரம்பமானது மட்டுமல்ல நிகழ்வுகளின் சிறப்பும் வந்தோர்கள் அனைவரையும் மிகவும் கவர்ந்திருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நகரபிதா

யோகானஸ் பைசன்காற்ஸ் அவர்கள் தமிழர்களின் பணிசெய் முறையையும் பண்புகளையும் தான் மதிப்பதாகவும இதுபோன்ற பணிகள் தொடர கஸ்ரொப் – றவுக்சல் நகரசபை மேலும் வேண்டிய உதவிகளைச் செய்யும் என்றும் உறுதியளித்தார்.;

தமிழாலயத்தின் தந்தை ஆசிரியர் திரு.

இரா. நாகலிங்கம் அவர்களையும் அவரது துணைவியார் திருமதி. ஆ. நாகலிங்கம் அம்மையாரையும் கஸ்ரொப்-றவுக்சல் தமிழாலய நிர்வாகமும் தமிழாலயப் பெற்றோர்களும் அவர்களுக்கான கௌரவத்தை வழங்கினர். அதுமட்டுமல்ல ஆசிரியர் திரு. இரா. நாகலிங்கம் அவர்கள் பேசும் போது தான் செய்த பணிகளை மக்களோடு பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாது தானும் தனது துணைவியாரும் இன்றும் ஆசியர்களாகப் பணியாற்றுவதையிட்டு மகிழ்;ந்து கொள்வதாகவும் தங்கள் இறுதிக்காலம் வரை தமது பணிகள் தொடரும் என்றும் கூறி நின்றார். முதிர்ந்;த வயதிலும் தமிழ்காக்க உழைக்கும் அவர் சேவையும் அவர் விருப்பும் நிறைவேற வாழ்த்துவோம்.

தற்போதைய கல்விக்கழகத்தின் பொறுப்பாளர் திரு. செ.லோகானந்தம் அவர்கள் தான் புறப்பட்டு நிகழ்வுக்கு வரும்போது தான் மனதுக்குள் போட்ட கணிப்பை கஸ்ரொப் – றவுக்சல் தமிழாலயம் முறியடித்துத் தனக்குப் புதிய பல பாடங்களைக் கற்றுக் கொடுத்;துள்ளது என்றும் அதைக் கண்டு தான் ;மகிழ்வதாகவும் மனமாரப் பாராட்டினார்.

வடமத்தியமாநிலச் செயல்பாட்டாளர்களில் ஒருவரான திருமதி. வளர்மதி யோகஜெகதீஸ்வரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். அவர் தனது உரையில் கஸ்ரொப் – றவுக்சல் மக்கள் கட்டுக்கோப்பாக நடந்து கொள்ளும் முறைகளையும தமிழ்மேல் கொண்டுள்ள பற்றையும் பாராட்டி இவர்கள் பணிதொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது மட்டுமல்லாமல் நிறைவாக மழலைகளின் கலை நிகழ்வுகளைத் தான் கண்டு ஆச்சரியம் கொண்டதாகவும் மனமார வாழ்த்தி மகிழ்ந்தார்;.

தமிழ்க் கல்விக்கழக வடமத்தியமாநிலப் பொறுப்பாளராகப் பணியாற்றியவரும் யேர்மனி மேஜர் பாரதிகலைக்கூடப் பொறுப்பாளருமான திரு.லோ. வலன்ரையின் அவர்கள் இவ்விழாவுக்குப் பலவழிகளில் ஒத்துழைப்பு நல்கியதோடு நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும.; தமிழாலயத்தின் இரு இளம் ஆசிரியைகளைத் தொகுப்பாளர்களாகப் பயிற்று வித்து நிகழ்வை நடத்தியது சிறப்பாக அமைந்திருந்தது. இவர் உரையாற்றியபோது தமிழாலயத்தையும் நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களையும்

பாராட்டியதோடு அனைத்துத் தரப்பினரும் தமது முரண்பாடுகளை மறந்து ஒற்றுமை உணர்வோடு தாயகம் விடுதலை அடையச் செயற்ப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். திரு வலன்ரையின் அவர்கள் தமிழாலயங்களின் வளர்ச்சிக்கு திரு நாகலிங்கம் ஐயாவுடன் நின்று பெரும்பங்காற்றியவர். விடுதலை உணர்வோடு நீண்ட காலம் பணியாற்றி இவரது பணி தொடர வாழ்த்துகிறோம்.

திருமலைக் கவிஞரும் காலக்கவியுமான திரு.தா.சிவநாதன் அவர்கள் தமிழினப்பதியம்
புரிதல் ஆகிய நாடகங்களையும்
தாயைப்பற்றிய கவியரங்கையும் தயாரித்து நெறிப்படுத்தி வழங்கினார். தமிழாலய இளம் மாணவர்கள் இயல்பாகவும் சிறப்பாகவும் இந்நிகழ்வுகளை அலங்கரித்தார்கள்.
இவர்கள்பணிதொடரவாழ்த்துவோம்

உரை நடனம்தமிழிசை கவியரங்கம் (நாடகம் என மாணவர்கள் தமது கலைப்பிடிப்பை வெளிக் கொணர்ந்திருந்தார்கள்.

முதன்மை விருந்தினர்கள; நிர்வாகக்குழுவினர் ஆசியர்கள் பணியாற்றிச் சென்றவர்கள் விழாசிறப்புற உதவி நல்கியவர்கள் மாணவர்கள் அனைவரும் இம்மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள். இது தமிழாலயத்தின் விழாமட்டுமாக அமையாது ஒரு நகரத்தின் விழாவாக அனைவரின் ஒத்துழைப்போடும் நடந்தேறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதுவரை யேர்மனியில் நடைபெறாத புதினம்? கஸ்ரொப் – றவுக்சல் ; நகரில்
நடந்துள்ளது. ஒரு யேர்மனிய உணவகம் 300 பேருக்கான இரவு உணவை இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் நிழல்ப்படத்தைக்கீழ்காணலாம்

ஊடகவியலாளர் எஸ்;.தேவராசா
ஊடக இணைப்பாளர் உழவன்.

Related Posts Plugin for WordPress, Blogger...