இந்த சிறுப்பிட்டி இணையம் தொடங்கிய காலத்தில் இருந்து செய்திப்பிரிவில் இயங்கிய கோபி ,ரமணன் ,நேமி
இவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது.எம்மை எல்லோரையும் விட திரு *நேமி* அவர்கள் நாளாந்தம் செய்தி இணைப்பதில்
முதலிடம் வகித்து இந்த இணையத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து தொடர்ந்து கொண்டே இருக்கின்றார்………
அவருக்கு எமது நல் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.கோபி அவர்கள் கிராமத்து நிகழ்வுகளை
காணொளி ,புகைப்படங்கள் நாளாந்த செய்திகள், போன்று வரலாறுகள் ,என்று தந்து கொண்டே இருந்தார் .இப்போது சிறு தொய்வு அவரின் சிரமமும் எமக்கு
புரியுது. மீண்டும் தகவல்கள் தர உருமையுடன் கேட்டுக்கொள்கிறோம் .மற்றது ரமணன் அவர்கள் வேறு துறைகளிலும் இணையத்துக்கு உதவி வருவதினால்
அவரையும் மீண்டும் செய்திப்பிரிவிலும் தகவல்களை தரும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் .இவர்களுடன் செய்திதொடர்பாடல் வரிசையில்
தவம் ,சந்திரன், தேவர் அண்ணர்,முரளி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் .இவர்களுக்கு இந்த சிறுப்பிட்டி இணைய நிர்வாகம் நன்றி கூறுகின்றது .
இவர்களுடன் புதியவன், சிவநேசன் அண்ணர் இருவரும் இணைய ஒருங்கிணைப்பில் செய்து வரும் உதவி போற்றத்தக்கது இவர்களுக்கும் எமது நன்றிகள்.
மற்றும் ரவி அண்ணர் ,தேவ ராசா அண்ணர் இவர்கள் இருவரையும் எந்த பிரிவில் இணைப்பதென்று உண்மையில் எனக்கு புரியவில்லை …..
கவிதை ,கட்டுரை ,செய்தி ,தகவல் பரி மாற்றம்,பாடல்கள் காணொளிகள்,அதற்கும் அப்பால் சென்று S.T.S Studio கலையக நண்பர்கள் கணேஷ் அண்ணர் ,
மற்றும் குடும்பத்தினருடனும் சேர்ந்து தரும் ஆக்கங்களால் நானும் எமது சிறுப்பிட்டி இணையமும் இவர்களை ஒரு பிரிவிலும் பிரித்து சேர்க்காமல்
அப்படியே விட்டுவிடுவதாக எண்ணியுள்ளேன் . மற்றும் சிறுப்பிட்டி இணையத்துக்கு இணைப்புக்கொடுத்த அத்தனை இணையங்களுக்கும் எமது சிறுப்பிட்டி இணைய
நிர்வாகத்தினரின் பணிவான நன்றிகள் உரித்தாகட்டும் .இணையம் வளர்த்த அத்தனை உள்ளங்களுக்கும் உங்கள் மனம் குளிர இந்த பாடலை காணிக்கையாக தருகிறோம் .
இவர்களுடன் இந்த இணையத்தை சுவாசித்து பின்னூட்டம் அளித்து எம்மை ஊக்குவித்த அத்தனை உள்ளங்களுக்கும் எமது நன்றிகள் .தொடர்ந்து எமது குறை நிறைகளை
சுட்டிக்காட்டும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் .மீண்டும் மறு மடலில் நேயர்களை சந்திக்க காத்திருக்கும் இணைய நிர்வாகி …விமல்














best wishes for your all efforts