தொடர்ச்சி…2

இக்காலத்தில் ஆலயம் அனாதரவான நிலயில் இருப்பதை மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஆனவத்தை அடக்கும் பொருட்டு எம்பெருமான் திருவுளம் கொண்டு தினமும் பகல் 12 மணிக்கு மணியடித்து பூசை நடப்பது போன்ற ஒலியும், மாலை 6 மணிக்கு பிற்பாடு ஓர் கறுத்த நாயுடன் ஒருவர் ஆலயச்சூழலில் வலம் வருவதும் நாளாந்த அற்புத நிகழ்ச்சியாகிவிட்டது. இதனால் மக்கள் ஆலயச்சூழலுக்கு ஓர் அச்ச உணர்வுடனேயே செல்வதும், மாலை ஆனவுடன் வீட்டைவிட்டு வெளியில் வருவதும் இல்லை. இப்படியே சில ஆண்டுகள் களிந்தன.

இவ்வாறிருக்கும் காலத்தில் இக் கிராமத்தில் பிறந்திருந்த கார்த்திகேசு செல்லப்பு என்பவர் தனது இளம் வயதில் மலேசியாவில் காட்டு இலாகாவில் பணிபுரிந்து வரும் காலத்தில் தவறுதலாக ஏற்பட்ட விபத்தின் கரணமாக வலதுபக்க இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட ஊனத்தினால் தான் பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற ஆவலில் சிறுப்பிட்டி மேற்கு கிராமத்துக்கு வந்து ஆலய சூழலில் வாழ்ந்துவந்ததனது சகோதரி குஞ்சுப்பிள்ளையுடன்வசித்து வந்தார். இவ்வாறு வசித்துவரும்போது எம்பெருமான் நிகள்த்தும் அற்புத நிகள்வயும் இவர் காணத்தவறவில்லை. அதனை தனது சகோதரியிடம் கேட்டு விபரத்தை அறிந்து இவ்வாலயத்தை அமைக்க திடசங்கற்பம் கொண்டார்.

அதன் பிரகாரம் இவ்வாலயத்தை முன்பு நிர்வகித்து வந்த இளயதம்பி வேலுப்பிள்ளையுடன் கதைத்து தானும் முன்னின்று இருவருமாக அக்காலத்தில் வாழ்ந்திருந்த இளைஞர்களின் உதவியோடு ஒவ்வொரு விடக்கச்சென்று பணம் சேகரித்து ஆலயம் அமைக்கத் தொடங்கினார்கள். அப்போது ஆலயம் ஒரு கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும் என்ற திட்டம் அவர்களுக்குத் தோன்றவே சொத்தியப்ப என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கார்த்திகேசு செல்லப்பு அவர்களின் தலமயின் கீழ் இளையதம்பி வேலுப்பிள்ளை, வல்லிபுரம் சின்னையா, கந்தர் வல்லிபுரம், வேலுப்பிள்ளை கனகசபை, சண்முகம் இளையதம்பி, குட்டியர் இராசா, குட்டியர் சின்னத்துரை, கார்த்திகேசு தம்பிப்பிள்ளை, வல்லிபுரம் தம்பிமுத்து, ஆகியோர் கொண்ட ஒரு பரிபாலனசபையும் அமைக்கப்படது…

பாகம்3

வரலாறு தொடரும்…