வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்றது. இது தொடர்பாக செய்திகள் உலகில் எங்கேயாவது ஓர் மூலையில் இருந்து வந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் வேற்றுக்கிர ஜீவராசி ஒன்றினது எனக் கருதப்படும் சடலமொன்று சைபீரியாவின் பனிப் பிரதேசமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு இதன் காணொளியும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தென் சைபீரியாவின் இர்கட்ஸ்க் பகுதியில் இச் சடலத்தினை மலையேறுபவர்கள் கண்டுபிடித்துள்ளனர். உருக்குலைந்த நிலையிலேயே இச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது போலியானதென ஒரு சாரார் தெரிவிக்கும் அதேவேளை இதனை நம்புபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .