ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன் படி ஒரு இறாத்தல் பாணின் விலை 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

பிரிமா நிறுவனம் மாவின் விலையை அதிகரித்துள்ளதால் பாணின் விலையை அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்திருந்தார். தற்போது ஒரு இறாத்தல் பாணின் விலை 48 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.