கற்பிட்டியை அண்டிய பிரதேச கடற்தொழிலாளர்களின் வலையில் இதுவரை இனம் காணப்படாத மர்மக் கடல் பிராணியொன்று சிக்கியுள்ளது.கற்பிட்டியின் முகத்துவாரம் பிரதேசத்தை அண்டிய நாவலடி பிரதேச மீனவர்களின் வலையிலேயே நேற்று அதிகாலை பிரஸ்தாப மர்மப் பிராணி சிக்கியுள்ளது. அது குறித்து அவர்கள் மீன்பிடித்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவித்துள்ளனர்.

பிரஸ்தாப விலங்கு நான்கரை அடி நீளமான உடற்பகுதியையும்,  ஐந்தடிக்கும் மேலான வால் பகுதியையும் கொண்டிருந்ததுடன் அதன் உடம்பு முழுவதும் உரோமங்களால் மூடப்பட்டிருந்தது. அத்துடன் இரண்டு கைகளும் அதற்கு அமைந்திருந்தது.

விலங்கைப் பரிசோதித்த மீன்பிடித்துறை அதிகாரிகள் அது இதுவரை இனம் காணப்படாத கடல்வாழ் முலையூட்டி ஒன்று எனத் தெரிவித்துள்ளதுடன், அதன் உடலை கொலஜின் எனும் புரத வகையொன்றே உரோமம் போன்று மூடியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

விலங்கு இறந்து போயிருந்த காரணத்தால் அதனைப் புதைத்து விட்டு அதன் பின் அதன் எலும்புகளைத் தோண்டியெடுத்து ஆய்வுகளை மேற்கொள்ள நிபுணர்கள் முடிவெடுத்துள்ளனர்.