சைபர் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படும் என சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
சைபர் குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டத்திற்கு சுவிஸ் பாராளுமன்றம் பூரண ஆதரவினை வழங்கியுள்ளது.

கணனி ஹெக்கர்கள், தரவுகளை திருடுவோர் மற்றும் இணைய சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

சைபர் குற்றச் செயல்கள் தொடர்பில் உலக நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என சுவிஸ் மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும், உலக நாடுகளின் ஒத்துழைப்பின்றி இணைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாது என சுவிட்சர்லாந்து நீதியமைச்சர் அறிவித்துள்ளார்.