பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து கோவில் ஒன்றை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மூடப்பட்டிருந்த இந்த கோயிலை திறக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கடந்த ஆண்டுதான் திறக்கப்பட்டது.கோரக்நாத் கோயிலுக்கு உள்ளே சாமி படங்களையும் சிவலிங்கம் ஒன்றையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் சாமி சிலைகளை கோயிலில் இருந்து வெளியே எடுத்துச் சென்றுவிட்டனர் என இந்து சமுதாயத் தலைவர்கள் தெரிவித்தனர்.கடந்த 2 மாதத்தில் இதுபோல தாக்குதல் நடைபெறுவது இது 3-வது முறை என கோயில் பாதுகாப்பாளர்கள் தெரிவித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...