இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மக்கட் தொகைக் கணக்கெடுப்பின்படி இலங்கை மக்கட்தொகை இரண்டு கோடியைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையின் மக்கட்தொகை 20.2 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

20.2 மில்லியன் மக்கட்தொகையில் 14.9 மில்லியன் மக்கள் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் தற்போதைய சனத்தொகை 997,754 பேராகும் இதில் 934,392 பேர் தமிழர்களாவர். 21,860 பேர் சிங்களவர்கள். 32,659 பேர் முஸ்லிம்களாவர். என கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

இந்தக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் சன்தொகையின் மூன்றில் ஒரு பங்கினர் வடக்கு கிழக்கிலேயே வசிக்கின்றனர். இதில் கிழக்கிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் கிழக்கில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம்களின் சனத்தொகை சமமாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கணக்கெடுப்பு அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டு அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அதன்பின்னர், மூன்று பிரிவுகளாக வெளியிடப்படவுள்ளதாகவும் இலங்கை புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது

ஆண்டுதோறும் மக்கட்தொகையில் 220 ஆயிரம் பேர் அதிகரித்து வருதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, 2041ம் ஆண்டளவில் இலங்கையில் மொத்த மக்கட்தொகை 24 மில்லியன்களாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது