1500 ஆபாச வார்த்தைக்கு பாகிஸ்தானில் தடை
November 19th, 2011 11:03 PM | உலகம் | No Comment
எஸ்எம்எஸ்.சில் அனுப்பும் ஆபாச வார்த்தைகளை தடை செய்ய செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் செல்போன் மூலம் எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதன்மூலம் தீவிரவாதிகள் தகவல் களை ரகசியமாகபரிமாறி கொள்வதும், இளம் பெண்களுக்கு ஆபாச தகவல்கள் அனுப்புவதும் அதிகரித்து வந்தது.
இதையடுத்து ஆபாச வார்த்தைகள், கிண்டல், கேலி, மத துவேசங்கள் இடம்பெறுவதை தடுக்க ...
குழந்தைக்கு அப்பாவான 95வயது தாத்தா.
November 19th, 2011 08:29 PM | உலகம் | No Comment
இந்த தாத்தாவின் திறமையைப் பார்த்தீர்களா? 95 வயதிலும் இளமைத் துள்ளலோடு இருக்கிறார் இந்த தாத்தா.
உலகிலேயே மிகக் கூடிய வயதில் அப்பாவாகிய பெருமை Ramjeet Raghav என்ற இவரையே சாரும்.
கடந்த ஆண்டு 94 ஆவது வயதில் தந்தையாகியிருக்கிறார் இவர். இவரது மனைவியின் பெயர் சகுந்தலா.. அவருக்கு 58 வயது.
Vikramjeet என்ற அவரது மகனுக்கு இப்போது ஒரு வயது ...
விநாயகர் லட்டு கின்னஸில் இடம் பிடித்தது
November 19th, 2011 07:41 PM | உணவு | No Comment
முன்னதாக கின்னஸ் சாதனையில் இருந்த 551 கிலோவில் தயாரான லட்டு முறியடிக்கப்பட்டது.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த விநாயகர் திருவிழாவிற்கு தயார் செய்யப்பட்ட 5,570 கிலோ லட்டு கின்னஸில் இடம் பெற்றது.
விசாகபட்டினத்தில் நடந்த 21 நாள் திருவிழாவிற்காக விநாயகர் உருவம் கொண்ட 117 அடி உயரத்தில் இந்த லட்டு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த லட்டு பிரிட்டனில் ...
இலங்கையில் முதலாவது பார்வையற்றோருக்கான பத்திரிகை அறிமுகம்!
November 19th, 2011 07:28 PM | featured | No Comment
இலங்கையின் விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் கண் பார்வை இழந்தோருக்கான வாரச் செய்திப் பத்திரிகை ஒன்றை சிங்கள மொழியில் அறிமுகம் செய்துள்ளது. இலங்கையில் வெளியாகும் அத்தகைய முதலாவது பத்திரிகை இதுவாகும்.
முதல் கட்டமாக பார்வையிழந்தோருக்கான பள்ளிக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களை இலக்கு வைத்து அச்சிடப்படுகின்ற இந்தப் பத்திரிகை, இலவசமாக விநியோகிக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பார்வையிழந்தோருக்கான பிறைலி மொழி ...
காலியை அண்டிய கடற்பகுதியில் நில நடுக்கம்
November 19th, 2011 02:45 PM | இலங்கை | No Comment
காலியை அண்டிய கடற் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.காலியிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கடற் பரப்பில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
4.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக் கூடிய வாய்ப்பில்லை என வளிமண்டலவியல் ...
2013 இல் யாழ்தேவி யாழ் குடாநாடு வரும்
November 19th, 2011 10:34 AM | ஊர்ப்புதினம் | No Comment
யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் யாழ்தேவி ரயில் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணம் சென்று சேரும் என்று தெரிவித்தார் போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார வெல்கம.
வடபகுதிக்கான ரயில் பாதையைச் சீரமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் இலங்கையும் நேற்றுக் கையெழுத்திட்டன.
போரினால் அழிக்கப்பட்ட வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை 150 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ரயில் ...
ஆடு செய்த பூஜை: காவிரிக் கரையில் நடந்த அதிசயம்!
November 18th, 2011 08:18 PM | featured | No Comment
ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரியாற்றில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். காவிரியில் நீராடி, ஆற்றங்கரையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மாலையணிந்து, விரதத்தைத் துவக்கினர். காவிரி ஆற்றங்கரையில் உள்ள மரத்தடியில், விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் ஏராளமாக உள்ளன.
பக்தர்கள் சிலர், தங்களது பழைய துளசி மணி மாலையை இங்கு வைத்து விட்டு, புதிய மாலையை அணிந்து கொண்டனர்.
விரதத்தைத் துவக்கிய ...
11 வயது சிறுமி பரிதாபகரமாக பலி
November 18th, 2011 07:59 PM | ஊர்ப்புதினம் | No Comment
செட்டிகுளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிகுளம், கதிர்காமர் நிவாரண கிராமத்துக்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தின் போது அக் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
மன்னாரிலிருந்து மதவாச்சி நோக்கி பயணித்த லொரியில் மோதுண்ட கிரிசாந்து வின்சிகா என்ற சிறுமியே விபத்தில் பலியாகியுள்ளார். வாகனத்தின் சாரதியைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வரும் செட்டிகுளம் பொலிஸார் சந்தேக ...
1990இற்குப் பின்னர் யாழ்ப்பாணம் போகவுள்ள யாழ்தேவி
November 18th, 2011 07:09 PM | featured | No Comment
வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை சீரமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.
போரினால் அழிக்கப்பட்ட வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை 150 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்கா தொடருந்து திணைக்களமும், இந்தியாவின் இர்கோர்ன் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.
கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கமைய பளை தொடக்கம் காங்கேசன்துறை ...
யாழ்.கைதடியில் இரண்டு பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கி மரணம்!
November 18th, 2011 06:20 AM | ஊர்ப்புதினம் | No Comment
யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரிபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினம் பரமேஸ்வரி (வயது 37) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் குறித்து விசாரணைகள் உறவினர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார்தெரிவித்தனர்.
இருந்தும் இவரது மரணம் ...













