சங்கத்தமிழும் சிறுப்பிட்டி மண்ணும் எங்கள் இருவிழிகள்… {வீடியோ இணைப்பு}
Juni 4th, 2011 02:44 PM | சிறுப்பிட்டி செய்தி | 4 Commentsவீட்டுக்குள் புகுந்து வாள் வெட்டு ஒரு குடும்பத்தில் மூவர் காயம்
Juni 4th, 2011 11:56 AM | ஊர்ப்புதினம் | No Comment
வீட்டுக்குள் அத்துமீறி உட்புகுந்த கும்பல் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு மந்துவில் கிழக்கில் இடம்பெற்றது.
இதே இடத்தைச் சேர்ந்த இராமலிங்கம் சிவசுந்தரலிங்கம் (வயது 57), இவரது மகனான சிவரதன் (வயது 30) ஆகியோர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி.சிவரதன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு ...
ஒரு வயதுக் குழந்தையின் வயிற்றில் கர்ப்பம்! (பட இணைப்பு)
Juni 4th, 2011 10:22 AM | featured | No Comment
ஒரு வயது குழந்தை கர்ப்பம் தரிக்க முடியுமா? ஆனால் மருத்துவ உலகில் இந்த அதிசயம் இடம்பெற்று உள்ளது.
சீனச் சிறுமி மெங்ரூ காங்க்.
இவரது வயிறு நாளொரு வண்ணமும் பெருத்துக் கொண்டே வந்தது.
அயலவர்கள் இச்சிறுமியை தீய சக்தியின் வடிவமாக பார்த்தனர்.
சிறுமி பெரிதும் அவஸ்தைப் பட்டார்.
இவரின் வளர்ப்புப் பெற்றோர் பயந்து விட்டனர்.
வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்தபோதுதான் இவரின் வயிற்றில் குழந்தை ...
படகு தடம்புரண்டதால் மீனவர்கள் 20 மீனவர்கள் காணவில்லை
Juni 4th, 2011 07:47 AM | இலங்கை | No Comment
இலங்கை இந்திய கடற்பரப்பில் உள்ள கச்சதீவுக்கு அருகில் தமிழகத்தில் இருந்து வந்த இரண்டு மீன்பிடி படகுகள் கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகமான ஐ.பி.எம். செய்தி வெளியிட்டுள்ளது.இந்த படகுகளில் இருந்த சுமார் 20 மீனவர்கள் வரையில் காணாமல் போயுள்ளதாக தமிழக மீனவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இந்த படகுகள் கவிழ்ந்துள்ளன. அவர்களை தேடும் பணிகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு ...
மீசாலையில் குடும்பப் பெண் தற்கொலை
Juni 3rd, 2011 06:32 PM | featured | 1 Comment
யாழ். மீசாலைப் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ். சாவகச்சேரி மீசாலை கிழக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான கணேசன் இராஜரஞ்சினி என்ற
45 வயதுடைய நபரே மேற்படி இறந்தவராவார். மனநோயாளியான மேற்படி நபர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த போது தமது நோய்க்குரிய மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டுள்ளார்.
...
பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் மாத்திரம் யாழ்.- பயணச்சீட்டை பெறவும்
Juni 3rd, 2011 05:58 PM | featured | No Comment
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்களிடம் மாத்திரம் யாழ்பாணம்-கொழும்பு தனியார் பஸ்களுக்கான பயண அனுமதிச் சீட்டை இன்று முதல் பதிவு செய்து கொள்ள முடியும் என அவ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத பஸ் வண்டிகளுக்கு சில தனியார் வர்த்தக நிறுவனங்களே டிக்கட்டுக்களை வழங்குவதாகவும் அதில் பல்வேறு முறைகேடுகள் நிலவுவதாகவும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.
இவ்வாறு ...
கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா (பட இணைப்பு)
Juni 3rd, 2011 02:35 PM | featured | No Comment
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலைத் திருப்பலியின் பின் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 09 நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பலி பூசைகள் தமிழிலும் நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிங்கள மொழியிலும் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சிங்கள ...
சென்னையில் நில அதிர்வு
Juni 3rd, 2011 01:43 PM | உலகம் | No Comment
சென்னை: சென்னை நகரின் சில பகுதிகளில் நேற்று மக்கள் லேசான நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். சென்னையில் நேற்று சில பகுதிகளில் பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதை மக்கள் உணர்ந்துள்ளனர்.
தி.நகர்,மயிலாப்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சில விநாடிகளே அதிர்வு இருந்ததாக நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.மிக மிகச் சிறிய அளவில் இருந்ததால் மக்கள் பீதி அடையவில்லை.அதேபோல் ...
வடக்கில் அதிகரிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம்
Juni 3rd, 2011 01:32 PM | ஊர்ப்புதினம் | No Comment
யாழ் குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் செல்வதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாவலர் பயிற்சி நெறியை நிறைவு செய்த 32 மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் ...
பின்லாடன் வேட்டை. நாயை வாங்க போட்டி
Juni 3rd, 2011 06:08 AM | உலகம் | No Comment
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது, அப்பணியில் ஈடுபட்ட இராணுவ நாயை தத்தெடுக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.
அமெரிக்க இராணுவத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது, மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்தபோது, அமெரிக்க ...













