யாழ். உரும்பிராயில் அதிசயம் (காணொளி, பட இணைப்பு)
Mai 5th, 2011 05:01 PM | featured | 1 Comment
தென்னை மரத்தில் ஒளியுடன் கண்கள் தோன்றிய அதிசயம் ஒன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நிகழ்ந்துள்ளது.
உரும்பிராய் மேற்கிலுள்ள ஒருவரின் வீடு அமைந்துள்ள காணியில் இருக்கும் தென்னையிலேயே தற்போது இரண்டு கண்களுடனும் புருவத்துடனும் இவ்வதிசயம் காணப்படுகிறது.
மக்கள் அலையலையாய இதனைச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் திருமதி ரமேஸ்வரன் கூறுகையில்,
இந்த தென்னங்கன்றுடன் இன்னும் பல தென்னங்கன்றுகளையும் நட்டிருந்தோம் அதில் ...
அடி வாங்கிய மாணவி மயக்கம் அடித்த ஆசிரியருக்கு மாற்றம்
Mai 5th, 2011 03:53 PM | featured | No Comment
ஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தண்டனை வழங்கிய ஆசிரியருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டது.மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.
தரம் 8 இல் கற்கும் மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததன் காரணமாக ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து அழுது கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி வீழ்ந்தார் ...
எதிரியை சுட்டுக்கொல்லும் வண்டு-அதிசயம் : (வீடியோ இணைப்பு)
Mai 5th, 2011 10:47 AM | featured | 1 Comment
புழு, பூச்சிகள், ஒன்றை ஒன்று தின்று வாழ்கின்றன. அதே சமயத்தில் ஒன்றிடம் இருந்து ஒன்று தப்பித்து வாழவும் இயற்கை அவற்றுக்கு வகை செய்திருக்கிறது.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் நிறைய எதிரிகள் இருக்கின்றன. மனிதர்களைவிட பிராணிகள், பூச்சியினங்களின் வாழ்க்கைதான் போராட்டக் களமாக உள்ளது. இந்தப் பூச்சிகளுள் சிலந்தி, தன் இரையை மிகவும் தந்திரமாகப் பற்றுகிறது. வலையைப் பின்னிவிட்டு, எப்போது பூச்சி ...
மரண அறிவித்தல் திரு நித்தியானந்தம் சிவகுமார்
Mai 5th, 2011 10:27 AM | featured | 2 Comments
சிறுப்பிட்டி தெற்கை பிறப்பிடமாகவும் டென்மார்க்கை வாழ்விடமாகவும் கொண்ட நித்தியானந்தம் சிவகுமார் அவர்கள் 03-05-2011 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற நித்தியானந்தம் மகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புதல்வனும், இராமநாதபிள்ளை இராசமலர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கதிரவேலு வள்ளிப்பிள்ளை அவர்களின் செல்லப் பேரனும்,
சிறீரஞ்சனி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜித்தா, மிதுலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமாமகேஸ்வரன் நாளினி(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ...
குளிக்கச் சென்ற மாணவன் பரிதாப மரணம்
Mai 5th, 2011 10:03 AM | ஊர்ச்செய்திகள் | 2 Comments
கிணற்றில் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த ரவி அமிலன் (வயது 10) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரார்.
இவர் பாடசாலை முடிந்தவுடன் கிணற்றில் தனியாக குளிக்க சென்றுள்ளார். ஆயினும் பின்னர் இவர் திரும்பாத
நிலையில் பெற்றோர் சென்று ...
வால்வெள்ளி {வீடியோ இணைப்பு}
Mai 4th, 2011 06:52 PM | featured | 2 Comments
வால்வெள்ளி (Comet) சிறுகோளை ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "dirty snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு, ...
ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம்
Mai 4th, 2011 03:00 PM | featured | 1 Comment
குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்தும் குழந்தைகளுக்கு அதிக எடை போடுதல், ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளுதல் போன்ற பிரச்சினைகள் குறைவு என ஐக்கிய அமெரிக்காவின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்றோரோடு அமர்ந்து வாரத்தில் 3 வேளையாவது உணவருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிப்பது 12 வீதத்தால் குறைவாக இருப்பதாக எல்லா ஆய்வுகளுமே தெரிவிக்கின்றன.
இவ்வாறானவர்களில் வேண்டாத உணவுப்பொருட்களை உண்பவர்கள் 20 வீதம் குறைவாகவும், ...
கோயில் தீர்த்தக் கேணியிலிருந்து சிறுவனின் சடலம்
Mai 4th, 2011 02:19 PM | featured | No Comment
யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலிலுள்ள இந்தன் முத்துவிநாயகர் கோயில் தீர்த்தக் கேணியிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை புளியங்கூடலைச் சேர்ந்த எ.எழிலரசன் என்ற 10 வயதுசிறுவனே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
நேற்று காலை மேற்குறித்த கோயிலில் நடைபெற்ற தீர்த்தத் திருவிழாவிற்கு சென்ற சிறுவன் வீடு திரும்பாமையால் அவனது பெற்றோர் ஊரெங்கும் தேடியவேளை சிறுவன் தீர்த்தக்கேணியில் சடலமாக இருப்பதைக் ...
யாழ்தேவியின் சேவை ஓமந்தை வரை விஸ்தரிப்பு
Mai 3rd, 2011 11:06 AM | featured | No Comment
கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்படும் யாழ்தேவி ஓமந்தை வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. வடபகுதியில் புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதலாவது புகையிரத நிலையம் ஓமந்தையில் இம்மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு கோட்டையிலிருந்து தாண்டிக்குளம் வரை மேற்கொண்ட யாழ்தேவியின் சேவை இம்மாதம் 28ஆம் திகதி முதல் ஓமந்தை வரை விஸ்தரிக்கப்படவுள்ளது.
நல்லூர் – ஓட்டுமடம், செம்மணி வீதிகளுக்கும் விரைவில் காப்பெற்
Mai 3rd, 2011 03:31 AM | featured | 1 Comment
செம்மணி வீதி, நல்லூர் ஓட்டு மடம் வீதி ஆகியவற்றைக் காப்பெற் வீதியாக மாற்றியமைக்கும் பணிகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது இந்த வீதிகளை அமைப்பதற்கு மதிப்பீடு செய்யும் பணிகள் இடம் பெற்று வருகின்றன எனவும் அவர் கூறினார்.ஏற்கனவே நகரில் ஸ்ரான்லி வீதி, கொழும்புத்துறை பிரதான வீதி,பழையபூங்கா வீதி ...