சிவராத்திரி தினத்தன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் நாலு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த போதிலும் பல பக்தர்களிடம் பெறுமதியான நகைகள், கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் பல்வேறு சமய நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாலாவியில் நீர் எடுத்து வந்து சிவனுக்கு திருமுழுக்கு செய்தனர். பல பெண்களின் நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள்ளேயே பெருமளவானோரது நகைகள் கொள்ளையிடப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது