உண்மைகளையும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் சொல்லியே ஆகவேண்டும் இது வெளிப்படையாக இயங்கும் இந்த இணையத்தின் முக்கிய கடமை அந்த வகையில் இந்த பதிவு.ஒரு சிலருக்கு உறுத்துதலைக்கொடுதாலும் உண்மைகள் பலருக்கு தெரியவேண்டும். இந்த இணையம் இருக்கும் வரை இணையப்பார்வை பகுதி தொடரும்.முதலில்  இந்த இணையம் சொல்லவருவது  இதுதான்…கிராமத்தின் பெயரை வைத்து இயங்கும் எந்த ஒன்றியமோ அமைப்புக்களோ குறிப்பாக ஐரோப்பாவில் செயல்படுபவர்களால் கிராம மக்களின் ஒற்றுமைக்கு ஒரு பயனும் வரப்போவது இல்லை அப்படி கிராம மக்கள் ஒன்று பட்டு வந்தாலும் இந்த ஒன்றியங்கள் (ஒன்றைத்தவிர)அதை எப்படி?? பார்க்கும் என்பதற்க்கு இந்த .இணையப்பார்வையுடன் உங்கள் கணிப்பையும் சேர்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள் 

 இவைகளின் பெயர்களை முதலில் பார்ப்போம்

  * சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்

 *சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம்

 *சிறுப்பிட்டி மேற்கு லண்டன் ஒன்றியக்கிளை

 *சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்

 **இன்னும் சில.. இனியும் பல முளைக்கும்

முதலில் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் இதுவே முதல் முதலாக இந்த இணையத்துடன்  சேர்த்து செயல்திறனுடன் ஆரம்பிக்கப்பட்டது.  இதன் ஆரம்பத்து பெயர் சிறுப்பிட்டி ஒன்றியம் பின்னர் சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டதினால் உதவும்கரங்கள் என்று பெயர் மாற்றப்பட்டது. அதற்க்கு பின்னர் தம்மை நிலை நிறுத்தி க்கொள்வதர்க்காக சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமாக மாற்றிக்கொண்டது .

பல பெயர்களை மாற்றிக்கொண்டாலும் இவர்களின் செயற்பாட்டில் எந்த மாற்றமோ தொய்வோ இல்லை. கிராமத்தில் அதிக செயல்பாட்டையும் பல சிக்கல்களையும் எதிர்கொண்டு இன்றுவரை… இன்று நினைப்பதை நாளை கிராமத்தில் செய்யக்கூடிய பலத்துடன் இயங்குகின்றது .

இந்த ஒன்றியத்துக்கு தலைவர், பொருளாளர், செயலாளர்,போசகர் என்று எவரும் இல்லை  கேட்டாலும் கேப்பவரையே தலைவர் என்பார்கள். இவர்களின் கொள்கை, யாப்பு ,எல்லாமே வாழும்போதே வாழ வைப்போம் பங்காளிகளே தலைவர்கள்

 .பலம்

1.நடை முறைக்கு சாத்தியமான செயல் பாடுகளை முன்னெடுத்து விரைவாக முடிப்பது

2.வரவு செலவுக்கணக்குகளை  இணையத்திலையே வெளியுடுவது

3.பல ஊர் ஒன்றியங்களின் ஆரம்பத்துக்கும் சிறுப்பிட்டி பல ஒன்றியங்களுக்கும் இதுவே முதன்மையானது

4;சிறுப்பிட்டி மக்களையும் சுவிஸ் நாட்டையும் தாண்டிய ஆதரவும் பங்களிப்பும் .இன்னும்பல…

 பலவீனம்

 *பெரிய உதவி நிறுவனம் என்ற தோற்றப்பாடு இவர்களின் உறவுகளையே  நினைக்க வைத்துவிட்டது. 

  *சிறுப்பிட்டி மேற்கையும் தாண்டிய செயல்பாடு ஆனால் பெயர் என்னமோ சிறுப்பிட்டி மேற்கு  ஒன்றியம்

  *இந்த இணையத்தை தவிர கிராமத்திலும் சரி இங்கும் சரி எந்த அமைப்போ ஒன்றியமோ ஆதரவுகூட கொடுப்பதில்லை

 *ஒரு  விடயமாகவே இவற்றை இவர்கள் எடுத்துக்கொள்வது இல்லை இது பெரும் தவறு

 *உதவி கோரி வரும் கடிதங்கள் ஏராளம் ஆனால் இதுவரை வீதியில் வைத்தே உறவுகளுக்கு உதவுகின்றார்கள் .

  *இவர்கள் முழுக்கிராமதுக்கும் உதவினாலும் முழுக்கிராம முன்னெடுப்பு ஒன்றுக்கு முன்வர மாட்டார்கள் 

 *தனிப்பட்டவர்களுக்கு செய்வது அதிகம் நீண்டகால பயன்தரும் திட்டங்கள் வகுத்து செயல் படாமை .இப்படி சில …

 இந்த இணையப்பார்வையில் ஒன்று மட்டும் உண்மை இவர்களுக்கு வளந்து வரும் தனிப்பட்டவர்களின் பங்களிப்பும் ஆதரவும் அதை விட இவர்களுக்குள்ள தன்னம்பிக்கையும் இவர்களின் ஒன்றிய முறைமையும் செயல்பாடுகள் தொடரும் என்பது திண்ணம். உங்களுக்கு உண்மையாக பொருத்தமான பெயர் உதவும் கரங்கள் என்பதே..தனிநபர் விளம்பரமற்ற ஆதிக்கமற்ற உங்கள் ஒன்றியம் தொடர இந்த இணையம் என்றும் அரணாக இருந்து  பாதுகார்த்து உங்கள்பக்க நியாயத்தன்மையை வெளியிடும் என்பதை அறியத்தருகின்றது .

 அடுத்து ;சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம்—

 

தொடரும்…. ஒன்றியப்பார்வை பகுதி:2) சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம்