இந்த ஒன்றியம் ஒன்றே மிகுந்த எதிர்பார்ப்புக்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஒன்றியத்துக்கு இரண்டு கிராம இணையத்தினது ஆதரவும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினது ஆதரவும் மற்றும் ஆற்றல் உள்ள அனைத்து வயதினரின் பங்களிப்போடு மட்டுமல்லாது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தில் இருந்தவர்களை விட சிறுப்பிட்டி மேற்கு அதிக மக்கள் இந்த ஒன்றியத்தில் இருந்தார்கள் என்பது மறைக்க முடியாத உண்மை. அதுமட்டும் இல்லை ஒரு ஒன்றியதுக்கே உரிய சகல முறைமைகளும் கடைப்பிடிக்கப்பட்டு இந்த ஒன்றியத்துக்கான பொறுப்பாளர்களையும் உரிய முறையில் தெரிவு செய்து பொறுப்புக்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது சிறப்பம்சம்.மற்றும் இந்த ஒன்றியக்கூட்டங்களில் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ,சி. வை சிலை, கல்விக்கு முன்னுருமை, முழு கிராமத்துக்கும் இந்த ஒன்றியமும் அந்தந்த கிராமப்பகுதிகளுக்கு, அந்தந்த பகுதி ஒன்றியங்களும் செயல்படும் வகையான திட்டம் ,இங்கு சுவிசில் குடும்ப உறவுகளும் கலந்து உறவாட கலை விழா (ஒன்று கூடல்)போன்ற நல்ல திட்டங்களுடன் வளர்ந்த ஒன்றியம் செயல் முறைக்கு வர வழி தவறியது.

பலம்

1,நான் ஏற்கனவே எல்லாம் தெரிந்தவரை எழுதி விட்டேன்

2,இன்றும் இந்த ஒன்றியத்தில் அனுபவமுள்ள பலர்  இருக்கின்றனர்

3,இந்த ஒன்றியத்துக்கு  தொடர்ந்து இரு இணையங்களின் ஆதரவு உண்டு

4,இந்த ஒன்றியத்தில் இருக்கும் பெரியவர்கள்  மனம் வைத்தால்  வரும் பல சிக்கல்களை தவிர்க்கலாம்

 பலவீனம்

1,இந்த இணையத்தையே ஒரு எதிரியாக கருதியமை

2, இணையத்தின் வலிமை தெரியாமல் பேசும்பொருளாக்கி  தொடந்து கொச்சைப்படுதியமை 

3,சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் ஒன்று இருப்பதையே   மறந்தமை

4,வயதுக்கு மதிப்புக்கொடுத்த -மே ,ஒன்றிய பொடியளை செய்ய விட்டு பிழை மட்டும் கண்டு பிடித்தமை

5,இறுதியில் யாப்பின்றி ஏதுமே செய்யமுடியாது என்ற முடிவுக்குவந்தமை

6,ஒத்துக்கொண்ட கலை விழாவையாவது செய்யலாம் என்றால் அதற்கும் தடை

7,இந்த இணையமும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியமும் எடுத்த விலகல் முடிவு

 

 இதனால் சுவிஸ் சிறுப்பிட்டி மக்களையே தொடந்து ஒன்றுபடுத்த முடியாது போன நிலையில் முழு உலகத்தில் வாழும் சிறுப்பிட்டி மக்களை ஒன்று படுத்த முடியாது இதுவே இதன் முக்கிய பலவீனம் அதற்க்கு இதன் பெயரும் ஒரு காரணம் (சுவிஸ் சிறுப்பிட்டி ஒன்றியம் )இங்கு சென்று இதன் ஆரம்ப பதிப்புக்களை பாருங்கள்

http://www.siruppiddy.net/?p=13715

அடுத்து லண்டன் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியக்கிளை இணையப்பார்வை தொடரும்….

இந்த ஒன்றியப்பார்வை  மிக மிக சுவாரசியமனாது,விறு விறுப்பானகாமடி கலந்த பார்வை , இன்னும் 4 நாட்களுக்குள் தொடரும்..  காரணம் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.