சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு  அவர் ஆசிரியப் பணியாற்றிய கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் ஒரு சிலை 2001 ஆம் ஆண்டில் திறந்து  வைக்கப்பட்டுள்ளது .இந்த புகைப்படங்களை எடுத்து இணையத்துக்கு அனுப்பிய ஊர் உறவுக்கு இந்த இணையத்தின்  நன்றிகள். சி.வை அவர்களுக்கு ஏழாலையிலும் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளதாக தகவல். மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தயவு செய்து அறியத்தாருங்கள்.முடிந்தால் புகைப்படங்களையும் தந்துதவுங்கள்.சிறுப்பிட்டியைச் சேர்ந்தவர் எனப் பிரகடனப்படுத்தப்பட்டாலும் சிறுப்பிட்டிக் கிராமத்தில் இவரை நினைவு கூரத்தக்க அம்சங்கள் எவையும் இங்கு இல்லை என்பதையும் இங்கு வேதனையுடன் சுட்டிக் காட்ட வேண்டும் சிறுப்பிட்டியில் சி.வை.தாவிற்கு ஒரு நினைவுச் சிலையாவது வைப்பது சிறுப்பிட்டியூரவர்களைப் பெருமைப்படுத்துவதாக அமையுமல்லவா?இந்த சிறுப்பிட்டி இணையத்தின் பணிவான வேண்டு கோள் ஒன்று…அவர் பிறந்த சிறுப்பிட்டி கிராமத்தில் சிலை ஒன்று வைப்பதற்கு முயற்சிகள் பல காலமாக முன்னெடுக்கப்பட்டும்  இன்றுவரை அது அவரது நினைவுக்காலங்களில் நினைப்பதுடன் நின்று விடுகின்றது.இது முதலில் நிறுத்தப்பட வேண்டும்.இந்த சிறுப்பிட்டி இணையம் இதை முன்னெடுத்து விரைவாக முடித்துக்கொடுக்க  முன்வந்துள்ளது.இணையம் உரியவர்களிடம் வேண்டி நிற்பது அதற்குரிய தகுந்த இடம் மட்டுமே  அவரது அடுத்த நினைவு ஆண்டுக்குள் இதை    இணையம் உறுதியுடன் செயல் படும் உள்ளன்பு கொண்ட நல்லுள்ளங்களுடன் சேர்ந்து  செய்து முடிதுக்கொடுக்கும். இந்த செய்தியை வெளிப்படையாக இணையத்தில் பதிவு செய்து உறுதிப்படுத்துகின்றது.உரியவர்கள் விரைந்து இணைய முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி:சிறுப்பிட்டி இணையம்