ஒரு வயது குழந்தை கர்ப்பம் தரிக்க முடியுமா? ஆனால் மருத்துவ உலகில் இந்த அதிசயம் இடம்பெற்று உள்ளது.

சீனச் சிறுமி மெங்ரூ காங்க்.

இவரது வயிறு நாளொரு வண்ணமும் பெருத்துக் கொண்டே வந்தது.

அயலவர்கள் இச்சிறுமியை தீய சக்தியின் வடிவமாக பார்த்தனர்.

சிறுமி பெரிதும் அவஸ்தைப் பட்டார்.

இவரின் வளர்ப்புப் பெற்றோர் பயந்து விட்டனர்.

வைத்தியசாலைக்கு சென்று பரிசோதித்தபோதுதான் இவரின் வயிற்றில் குழந்தை உள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இவரது சொந்த தாய்க்கு உருவானவை இரட்டைச் சிசுக்கள்.

வளர்கின்றமைக்கு இடம் தேடி இவரின் கர்ப்பைக்குள் புகுந்து விட்டான் சகோதரன் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

உயிர் இல்லாத சிசு 10 மணித்தியால அறுவைச் சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றுக்குள் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது.

சத்திர சிகிச்சைக்கு 1000 பவுண்டு வரை செலவாகி உள்ளது. வளர்ப்புப் பெற்றோர் வறியவர்கள்.

இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு இச்சத்திர சிகிச்சைக்கு தேவையான நிதியை மனித நேயர்களிடம் இருந்து திரட்டி வழங்கி உள்ளது.

சத்திர சிகிச்சை வெற்றி பெற்றது.