சுவிசில் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர்சேதம் ஏதும் நிகழாமல் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

சுவிசின் வாலிஸ் மாகாணத்தில் உள்ள Kleegärtenstrasse என்ற பகுதியில் கிடங்கு ஒன்றில் நேற்று எதிர்பாரதவிதமாக தீப்பிடித்து கொண்டது.

அப்போது அங்கு விரைந்த சுமார் 90 தீயணைப்பு படையினர் கிடங்கில் உயிர்சேதம் ஏதும் நடக்காமல் அனைவரையும் உடனடியாக அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த கிடங்கின் அருகில் உள்ள புகலிடம் மையத்தில் இருக்கும் மொத்தம் 54 பேரை பாதுகாப்பின் காரணம் கருதி வெளியேற்றியதால் படுகாயம் ஏதும் இன்றி அவர்கள் தப்பித்துள்ளனர்.

ஆனால் இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது? என்ன காரணம் என்பது குறித்து விவரங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை.