சிறுப்பிட்டி மனோன்மணி ஆலயத்தின் சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் ஆலய பூங்காவனத்திருவிழா27.08.2018எல்லாம் வல்ல எம் ஊர் காக்கும் அம்பாள் தேர்தனிலே எழுந்தருளியதைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி மெல்ல மெல்ல அசைந்தாடி வந்த காட்சி அற்புதம்.அம்மன் அடியவர்கள் தம் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர். மங்கள வார்த்திய முழக்கமும், அடியவர்களின் அரோகராக் கோசமும் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.நூற்றுக் கணக்கான அடியவர்கள் கருணா கடாட்சியாம் மனோன் மணி அம்மனின் பக்திப்பிராவகத்தைக் கண்டு களித்தனர்.